Skip to main content
தன்னலம் துறந்து சிலுவையின் ஒளியில் புனிதமாகுதல்
தன்னலம் துறந்து சிலுவையின் ஒளியில் புனிதமாகுதல்
கேள்வி: திருப்பணியாளர்களாகிய நாங்கள் எங்கள் ஊழிய அனுபவங்களில் தன்னலம் துறப்பது எப்படி?
விடை: லூக்கா 9:23ல் ஆண்டவர் இயேசு “ஒருவர் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் தன்னலம் துறந்து நாள்தோறும் தமது சிலுவையை சுமந்து வரக்கடவர்” எனக் கூறுகின்றார். தன்னலம் துறத்தல் என்பது ஒவ்வொரு சமயங்களிலும் காணப்படும் பெரிதான உண்மையாகும். திருப்பணிகளில் தன்னலம் துறத்தல் என்பது பொருளாதார ரீதியில் மாத்திரம் எங்கள் ஒருத்தலைக் குறிக்காமல் எமது அனுபவங்களினூடாக இறைவன் எமது தன்னலத்தைத் துறக்க பல்வேறு சந்தர்ப்பங்களில் எம்மை வழிநடத்துகிறார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
நான் திருப்பணி செய்த ஒரு ஆலயத்தில் அங்கு ஓர் பாடசாலையில் பணிபுரிந்து பாடசாலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஓர் கூலித்தொழிலாளி என்னிடத்தில் தஞ்சமானார். அவர் எங்களோடேயே இருப்பார். காலையில் வேலைக்கு சென்று மாலையில் வந்து எங்களோடு இருந்து ஓய்வெடுப்பார். அவருக்கு யாரும் இல்லை. தங்குவதற்கு இடமும் இல்லை. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் சற்று குடிப்பழக்கம் உடையவர். திருமுழுக்கு பெற்ற ஒருவர். திருச்சபையில் திருவிருந்து வழிபாட்டில் கலந்துகொள்வார். ஊத்தை உடுப்போடு குளிப்பது குறைவாக இருந்தாலும் அவர் வழிபாட்டில் மக்களோடு உட்கார்ந்து இருந்து நன்றாக பாடுவார். இவருடைய துர்நாற்றம் மக்களுக்கு வீசும்போதும் மற்றும் இவருடைய செயற்பாடுகள் மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்கியது. எனவே, இவரை வழிபாட்டில் இருந்து இடைநிறுத்துமாறு என்னை வேண்டிக்கொண்டார்கள். ஆனால், நான் அதைச் செய்யவில்லை. ஏனெனில் அவருடைய வருகை பல்வேறு மக்களுக்கு அவர்களது தன்னலங்களை துறப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. சுயநல கோட்டைகளுக்குள்ளே ஆடம்பரமாக யாருடைய இடையூறுகளும் இல்லாமல் அமைதியாக இருந்து வழிபட வேண்டும் என்று எண்ணிய பரிசுத்த கூட்டத்திற்கு இது பாரிய அடி. எனவே தன்னலம் துறத்தல் என்று சொல்வது சிறப்பாக எனது பரிசுத்த கூண்டில் இருந்து ஆடம்பர கூண்டிலிருந்து வெளியே வந்து குழப்பத்தின் சூழ்நிலையில் இன்னுமொருவரை அங்கீகரித்தவாறு வழிபடுவதே தன்னலம் துறத்தல். எனவே இங்கு யோபு விக்னேஸ்வரன் என்ற நபர் எனது புனித தன்மைக்கு அவருடைய வாழ்வு உதவியது. நான் தன்னலத்தை துறக்க அவரது வாழ்வு எனக்கு சாட்சியாக அமைந்தது.
ஆலயத்தில் ஓர் பெண்மணி என்னை அடிக்கடி சந்திக்க வருவார். அவர் ஒருமுறை என்னிடத்தில் வருகை தந்து, “ஐயா எனக்கு ஒரு மாப்பிளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்தவ மாப்பிளை கிடைக்கவில்லை. ஓர் இந்துவை திருமணம் செய்யும்படியாக என்னைக் கேட்டிருக்கிறார்கள். எனக்கு வயதும் செல்கிறது. நான் செய்யட்டுமா?” என்று கேட்டார். நான், “ஆமாம்” என்று பதிலுரைத்தேன். “அவ்வாறு நடைபெற்றால் நீங்கள் அதில் கலந்துகொள்வீர்களா?” என்று கேட்டார். நான், “ஆம்” என்று கூறினேன். திருமணம் ஓர் சனிக்கிழமை நடைபெற்றது. நானும் அதில் கலந்துகொண்டேன். ஞாயிற்றுக்கிழமை வழமைபோல அப்பெண்மணி கணவனுடன் ஆலயத்திற்கு வந்தார். அவர் திருவிருந்துக்கு பந்தியண்டை உட்கார்ந்து இருந்தார். நானும் வழமைபோல அவளுக்கு திருவிருந்து வழங்கினேன். திருவிருந்து வழிபாட்டின் நிறைவிலே ஒருசிலர் என்னிடத்தில் வந்து, “அவள் அம்பாள் தாலி அணிந்து வந்திருந்தாள். நீங்களோ திருவிருந்து கொடுத்துவிட்டீர்கள்” என்றார்கள். அப்பொழுது நான் அவர்களைப் பார்த்து, “நான் திருவிருந்து கொடுக்கும்போது யாருடைய கழுத்தையும் நான் பார்ப்பதில்லை. கரங்களையே நான் உற்றுப்பார்ப்பேன்” என பதிலளித்தேன். இன்று அவர்கள் இருவரும் கிறிஸ்தவ பின்னணியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவள் அல்லது அப்பெண்மணி எங்களுடைய பீடத்தை சவாலிட்டார். எல்லோரையும் உள்வாங்க வேண்டும் என்ற பண்பை மறந்து நாம் வழிபடும்போது அது ஒரு தன்னலமே சுயநலமே. அப்பண்புகளிலிருந்து வெளிவருமாறு அப்பெண்ணும் மேற்கூறப்பட்ட நபரும் எங்களுக்கு சவாலிட்டுருக்கிறார்கள்.
எமது திருப்பணியில் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்வுகளும் எங்கள் தன்னலங்களை துறந்து சிலுவையின் ஒளியின் மற்ற மக்களின் நன்மைக்காக நாம் துன்பங்களைத் தெரிந்தெடுத்து அத்துன்பங்களின் ஊடாக புனிதமாகுதலின் அனுபவத்துக்குள் பிரவேசிக்க திரித்துவக் கடவுள் திருப்பணியாளர்களாகிய எங்களுக்கு அருள்புரிவாராக.
About this "Emunah and Tzedek: Faith and Justice in Leadership," series
Welcome to this enlightening blog series, "Emunah and Tzedek: Faith and Justice in Leadership," written by Rev. A. Stephen, a dedicated Priest in the Church of Ceylon, Sri Lanka.
Rev. Arulampalam Stephen is not only a theological educator but also an inspirational speaker and prolific writer, having authored numerous books and articles. Despite being visually challenged, his unwavering faith and commitment to justice have shaped his ministry and leadership. In this series, he explores the profound biblical concepts of Emunah (אֱמוּנָה) – meaning "faith" or "trust," and Tzedek (צֶדֶק) – meaning "justice" or "righteousness," offering valuable insights for young priests and leaders seeking to deepen their spiritual journey while serving their communities with integrity, compassion, and biblical wisdom.
Comments
Post a Comment