"ஈஸ்டர் முட்டையும், முயலும்" - J. அகஸ்டின்

ஈஸ்டர் முட்டை ,  பன்னி ( Bunny )  முயல் 

It's a quick 2-minute read.



ஈஸ்டர் பண்டிகை என்றால் அதற்கு அடையாமாக முட்டைகளையும் முயலையும் காட்டுவது அண்மைக் காலத்தில் வழக்கமாகிவிட்டது.

முட்டை :

ஆண்டவர் உயிர்த்தெழுந்ததற்கு அடையாளமாக முட்டை உள்ளது. Paechal  egg general symbol of Fertility and Rebirth in Christianity for the celebration of Easter. முட்டைக்குள் ஒரு சிறிய கருவாக இருப்பது கொஞ்ச  நாட்களில் வளர்ந்து உயிருள்ள ஒரு குஞ்சியாக வெளி வருகிறது. அதுபோல் கல்லறைக்குள் இருந்த இயேசு  மூன்றாம் நாளில் உயிர் பெற்று வெளியே வந்தார் என்பதற்கு இது அடையாளமாக உள்ளது.

மேலும் எகிப்தியக் கல்லறைகளில் தங்கம் , வெள்ளியிலான முட்டைகளை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

கிறிஸ்தவர்களும் அதைப் பின்பற்றினார்கள்.

இது முதல்முதலாக கிழக்கு மெசபொத்தோமியா நாட்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது.

முயல் :

முயலையும் ஈஸ்டருக்கு அடையாளமாக ஏற்கும் பழக்கம் அமெரிக்காவிலிருந்து பரவியது.

இது அந்நியக் கடவுளான Eostre இன் மிருக அடையாளமான முயலைக் குறிக்கும். Symbol of Rabbit - pagan tradition Goddess of Eostre whose animal symbol is Rabbit. பலுகிப் பெருகுவதற்கும் கருவுறுவதற்கும் அடையாளமாக உள்ளது.

இதில் வருந்தத்தக்க செயல் என்னவென்றால் ; எவ்வாறு இயேசுவின் பிறப்பில் இயேசுவைக் கிறிஸ்மஸ் ஸ்டார் , கிறிஸ்மஸ் டிரி , கிறிஸ்மஸ் குடில் , கிறிஸ்மஸ் தாத்தா போன்றவைகள் எடுத்துக்கொண்டனவோ அதுபோல் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் கிறிஸ்துவை இந்த முட்டைகளும் முயல்களும் எடுத்துக்கொண்டன.

மேலைநாடுகளில் இப்போது உயிருள்ள முட்டைகளுக்குப் பதிலாகப் பலவிதமான சாக்லேட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

கோடிக்கணக்கான ரூபாய்களுக்குச் சாக்லேட்கள் விற்பனையாகுகின்றன.

இரண்டு உண்மைச் சம்பவங்களிலும் ஆண்டவர் இயேசு மறக்கப்பட்டுவிட்டார்.

ஆகக் கிறிஸ்மஸ் என்றால் ஸ்டார்களையோ தாத்தாக்களையோ முக்கியப்படுத்தாமல் இயேசுவை முக்கியப்படுத்துவோம்.

அதுபோல் கிறிஸ்து உயிர்த்தெழுதல் என்றால் முட்டைகளையும் முயல்களையும் முக்கியப்படுத்தாமல் இயேசுவை முக்கியப்படுத்துவோம்


அருட்பணி. J. அகஸ்டின்

ஆயர், இறையியல் ஆசிரியர், இந்தியா.

Comments