"அன்பின் அடையாளம்"- J. அகஸ்டின்

SYMBOL OF LOVE



பிப்ரவரி 14 காதலர் தினமாம்.

காதல் அல்லது அன்பு என்பதற்கு அடையாளமாக நாம் பயன்படுதும் இதயச் சின்னம் கி. பி. 14 ஆம் நூற்றாண்டில்தான் பழக்கத்திற்கு வந்தது.

கி.ப. 6 ஆம் நூற்றாண்டில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் மேலும் லிபியாவிலும் இந்த இதய வடிவச் சின்னம் வேறு நோக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. அது " சில்பியம் - SILPHIUM " என்கிற செடியின் பூ மற்றும் இலை போன்று இருந்தது. அதை அவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ( BIRTH CONTROL ) அடையாளமாகப் பயன்படுத்தினர்.

14 ஆம் நூற்றாண்டில்தான் இது " அன்பு " என்பதற்கு அடையாளமாக வீடுகள் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. மற்றப்படி " காதலுக்கு " அடையாளமாக அல்ல.

மத்தியக் காலத்தில் அரிஸ்டாட்டில் என்கிற அறிஞர் ( மெய்யியலாளர் ) அன்பு என்னும் உணர்வு நம் இதயத்திலிருந்துதான் வருகிறது. அறிவியல் கருத்துப்படி மூளையில் இருந்தல்ல என்று கூறினார்.

கத்தோலிக்கத் திருச்சபை இதை எதிர்த்தது ( forbade ).

ரோமர்கள் சிலிபியம் ( Siliphium ) என்கிற செடியின் இதயவடிவிலான பூவை ஒரு பக்கமும் அதன் இலைகளை மறுபக்கமும் இருக்கும்படி அமைத்து நாணயங்களை வெளியிட்டனர். ஆனால் மக்கள் ஒரு காட்டுச் செடியை நம் இதயத்திற்கு அடையாளமாக ஏற்பது ஏற்புடையதல்ல என்று அதனை ஒதுக்கி விட்டனர்.

பின்னர் அன்பு நம் இதயத்தில் இருந்துதான் வருகிறது என்று நம்பினர்.

இதனால் இந்த இதயவடிவம் அன்புக்கு ( காதலுக்கு ) அடையாளமாக ஏற்கப்பட்து.

ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம் இதயம் நம் உடலுக்கான இரத்தத்தை ஆக்ஸிஜனுடன் சேர்த்து நம் உடல் முழுவதற்கும் பம்ப் பண்ணுகிற வேலையைத்தான் செய்கிறது. இதற்குச் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் கிடையாது. நம் மூளைதான் நம் உணர்வுகள் ( அன்பு உட்பட ) பிற செயல்பாடுகள் அனைத்திற்கும் காரணம் ).

கிறிஸ்தவர்கள்:

திருமறையும் அன்பு , விசுவாசம் அனைத்தும் இதயத்தில் இருந்துதான் வருகிறது.

ஆதலால் ஆண்டவரை உங்கள் " இருதயத்தில் " ஏற்றுக்கொள்ளுங்கள் என்று போதிக்கிறது.

" மகனே உன் இருதயத்தை எனக்குத் தா என்று " கேட்கிறது.

மகனே உன் நெஞ்சை எனக்குத் தாராயோ - என்றும்

...சந்ததமுனது " இதயம் " காயமும் சாமி கிறிஸ்தினுடையதல்லவோ '

என்று உடற்கூறுக்கு ( ANATOMY ) எதிராகவும் அரிஸ்டாட்டிலுடன் சேர்ந்து அறிவியலுக்கு எதிராகவும் பாடத்தூண்டுகிறது.

இதில் கத்தோலிக்கர்கள் ஓரடி முன்னே போய் "இயேசுவின் திருஇருதயம் அவரது நெஞ்சுக்கு மேல் தெரிகிறது. இதை வணங்கினால் நமக்கு மோட்சம் நிச்சயம் என்று நம்புகின்றனர்.


அருட்பணி. J. அகஸ்டின்

ஆயர், இறையியல் ஆசிரியர், இந்தியா.





Comments