எம்மாவு என்ற ஊருக்குச் சென்ற சீடர்கள் இருவர்
லூக்கா:24: 13 - 36
ஆண்டவர் உயிர்தெழுந்த அதே நாளிலேயே இரண்டு சீடர்கள் எம்மாவு என்ற ஊருக்குப் போனார்கள். ஆண்டவரும் அவர்களுடன் சேர்ந்து போனார். மாலை மங்கி இரவு சூழ்ந்து வந்தபோது இயேசு அவர்களை விட்டு வேறு வழியாகப் போக முனைந்தார்.
அப்போது சீடர்கள் இருவரும் " இரவு வந்து விட்டது. நீர் ஏன் தனியாக இந்த அத்வானக் காட்டுக்குள்ளே போகிறீர் ? எங்க வீட்டுக்கு வாங்க இரண்டு அப்பம் சாப்பிட்டு, கொஞ்சம் ரசம் குடிக்லாம் " என்று அழைத்தார்கள்.
ஆண்டவரும் உடன் சென்று அப்பத்தை ஆசீரவதித்துக் கொடுத்தார. அவர்களுக்குக் கர்த்தரைக் கண்ட பெருமகிழ்ச்சி.
அது இருக்கட்டும்.
இந்த வரலாற்றைப் பாடலாகப் பாடுகிற
வேதநாயகம் பாகவதர்
" உந்தன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே பாக்கியம் அளித் தாண்டருள்வாய் " !
என்று பாடுகிறார்.
சாஸ்திரியார் ஆண்டவரிடம் கேட்டபடி
இன்று திருச்சபை உலகம் முழுவதும் வளர்ந்து பெருகிவிட்டது.
ஆனால் திருச்சபைகளுக்குள் இருக்கும் பிரிவினைகளை ஆண்டவர் பரிகரிப்பதற்கு நாம் இடம் கொடாமல் வளர்த்துக் கொண்டே இருக்கிறோம்.
திருச்சபை ஆண்டவரின் சொந்த மனை. இதற்குள் நாம் கலவரங்களை, பிரிவினை வாதங்களை வளர்க்கக்கூடாது.
மீண்டும் ஒரு தடவை
" வாருமையா போதகரே..."
என்ற பாடவைப் பாடுங்கள்.
உரக்கப் பாடுங்கள். !
அருட்பணி. J. அகஸ்டின்
ஆயர், இறையியல் ஆசிரியர், இந்தியா.


Comments
Post a Comment