குருகுலம் லுத்தரன் இறையியல் கல்லூரியில் 79 வது தென்னிந்திய திருச்சபை உருவாக்க நாள் வழிபாடு
79 வது தென்னிந்திய திருச்சபை உருவாக்க நாள் வழிபாடு குருகுலம் லுத்தரன் இறையியல் கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் பொது செயலாளரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தினுடைய தலைவரும், உலக கிறிஸ்தவ மாமன்றத்தின் மையக் குழு உறுப்பினருமாகிய மதிப்பிற்கும் மாண்புக்குமுரிய *வழக்குரைஞர் சி பெர்னாண்டஸ் ரத்ன ராஜா ஐயா* அவர்கள் பங்கு பெற்று சிறப்பு வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டார்கள்.
பறை இசையோடு தொடங்கிய இந்நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மதிப்பிற்குரிய வழக்குரைஞர் சி அட்வகேட் பெனண்டஸ்ரத்ன ராஜா ஐயா அவர்கள் இறையியல் மாணவர்கள் நடுவே சமூக எதார்த்த கேள்விக்கணைகளை விடுத்து எதிர்கால திருச்சபையின் ஊழியர்களுக்கு பலஅறைகூவலை விடுத்து சென்றார். குருகுலம் இறையியல் கல்லூரி தலித் இறையியல், பெண்ணிய விடுதலை இறையியல், பசுமை இறையியல் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லுவதற்காக அவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். அத்துடன் Theo- Genrotology எனும் முதியோர் கரிசனை இறையியலை முன்னெடுத்ததற்காக வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன் "குருகுலம்"சமஸ்கிருத சித்தாந்தத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சொல்லாக இருப்பினும் இந்தக் குருகுலத்தில் அனைவருக்கும் கல்வி வழங்கப்படுகிறது. சிறப்பாக பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள், விளிம்பு நிலையில் உள்ள அனைத்து மக்களுக்குமான இறையியல் கல்வியை வழங்குவதை முன்னிட்டு மகிழ்வினைத் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர் *வழக்குரைஞர் சி பெர்னாண்டஸ் ரத்தின ராஜா ஐயா* அவர்கள் தென்னிந்திய திருச்சபை மாணவர்களோடு இணைந்து சிறப்புப் பாடல் பாடியது அவர்களின் தாழ்மையின் பணியாள் தலைமைத்துவ மாதிரியை எடுத்தியம்பியது.
அவர்கள் மாணவர்களோடு இணைந்து சிறப்பு பாடலை பாடியதும் மாணவர்கள் இறையியல் சமூக மக்களோடு இணைந்து உணவருந்தியதும் ஒரு சிறப்பான தாழ்மையின் பணியாள்துவ தலைமைத்துவத்தை எடுத்தியதாக இருந்தது இந்நிகழ்வில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா ஆந்திர பிரதேசம், வட இந்திய, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல் மொழி பேசும் இந்திய சமூக மாணாக்கர்கள் பங்குபெற்றார்கள். சென்னைஉயர்நீதி மன்ற வழக்கறிஞர் திராவிடன் விஜய்போஸ் , திரு. டெடி பாண்டித்துரை மற்றும் கிறித்தவ நல அமைப்பு, அனைத்து தலித் கிறிஸ்தவர்கள் சமூகநீதி கூட்டமைப்பு ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் பங்குபெற்ற இந்நிகழ்வு திருவிருந்து வழிபாட்டோடு நிறைவு பெற்றது.
கலந்து கொண்ட அனைவரும் மகிழ்வோடு வழங்கப்பட்ட சிறப்பு ஐக்கிய உணவிலும் பங்கு பெற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் அருட்பணி. முனைவர். சொங்கராம் பசுமத்தாரி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கல்லூரியின் பொறுப்பு முதல்வர் அருட்பணி. முனைவர். நிலவில்லா ஞான பிரசன்னா அவர்களுக்கும், இந்நிகழ்வின் உடைய பொறுப்பாளர்கள் அருட்பணி முனைவர் எட்வின் ஜெபராஜ், முதுநிலை மாணவர்கள், அருட்பணி ஜெபசிங் சாமுவேல், அருட்பணி ஜாண் வெஸ்லி, அருட்பணி. ஐசக் பவுல் மற்றும் தேவியல் இளையோர், முதுநிலை மாணவர்கள் அனைவரும் இந்நிகழ்வினை முன்னிற்று சிறப்பாக நடத்தினர்.
இயேசு இயக்கம்
Comments
Post a Comment