மதுரை பசுமலையில் மாபெரும் மருத்துவ முகாம்

தென்னிந்திய திருச்சபை (Church of  South India) கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை, CSI பல் மருத்துவ கல்லூரி, மற்றும் அனுபவம் வாய்ந்த சிறந்த மருத்துவர்கள் கொண்ட குழுவும் CSI மதுரை இராமநாதபுரம் திருமண்டில தலித் ஆதிவாசி துறை இணைந்து மருத்துவ முகாமினை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 05. 10. 2025 அன்று பசுமலை திருச்சபையின் வளாகத்தில் நடத்தினார்கள். 

இந்நிகழ்வு சாதாரண ஒரு மருத்துவ முகாம் போல அல்லாமல் ஓர் சாலச் சிறந்த மருத்துவ மனையின் வளாகத்தில் நடைபெறும் மருத்துவ சேவை போலவே இருந்தது. இந்நிகழ்வில் மதுரை இராமநாதபுரம் திருமண்டிலத்தின் முதன்மைப் பணியாளரும் பசுமலை திருச்சபையின் குருசேகரத் தலைவருமான அருள்திரு.சதிஸ் 
அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள். தலித் மற்றும் சமுக நலத்துறை இயக்குநர் அருள்திரு. பால்பாண்டியன் அவர்கள் ஜெபித்து ஆரம்பித்து வைத்தார்கள். 

CSI கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையின் மருத்துவ மேற்பார்வையாளர் மருத்துவர் ஆலிஸ் ஜெசிந்தா அவர்கள் இம்முகாம் வெற்றியடைய ஆலோசனைகளை கொடுத்தார்கள்.  
"ஆண்டவரே, என்னை நலமாக்கும்; நானும் நலமடைவேன். என்னை விடுவியும்; நானும் விடுதலை அடைவேன்"
எனும் எரேமியா 17: 14 இன் திருவாக்கிற்கிணங்க இவ்வூழியத்தை திறம்பட நடத்தி பல தேவையிலுள்ள மக்களின் துயர் துடைத்து மிகச்சிறப்பு.

 

இந்நிகழ்வு திட்டமிட்ட நாள் முதல் மருத்துவ முகாம் நிறைவு பெறும் வரை ஒவ்வொரு சிறு சிறு செயல்கள் தொடங்கி அதை நேர்த்தியான முறையில் நிறைவு செய்யும் வரை சிறந்த முறையில் திட்டமிட்டு அதை வடிவமைத்து அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் மருத்துவர் Dr. மேத்யூ எபன் அவர்கள் சிறப்பாக செயலாற்றினார்கள். 

பல்வேறு துறைகளில் இருந்து வருகை புரிந்த அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் CSI கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை தலைமை மருத்துவர் பல் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.நல்லுபிரசாத் அவர்களுக்கும் பசுமலை திருச்சபை நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.



Comments