திருவருகைக் கால இரண்டாம் ஞாயிறு (விவிலிய ஞாயிறு)
(திருமுழுக்கு யோவானின் பிறப்பு)
லூக்கா 1:5-17
• வேதாகமச் சங்கம் 1804ம் ஆண்டு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டு 1821ல் இலங்கைக்கு வருகை தந்தது. பொதுவாக நாம் படைப்பில் செயற்பட்ட வார்த்தையை, இறைவாக்கினர் மூலம் பேசப்பட்ட வார்த்தையை, மனுவுருவாகிய வார்த்தையை, எழுதப்பட்ட வார்த்தையை நாம் சிந்திக்கின்றோம். வேதாகம சங்கம் எழுதப்பட்ட வார்த்தையையே மக்களுக்கு வழங்கி வருகின்றது.
• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி எரேமியா 36:1-10 இப்பகுதியில் பாபிலோனியா அடிமைத்தனத்தில் வாழும் மக்களுக்கு ஆண்டவரின் வார்த்தையை ஞாபகப்படுத்தி அதன் உயிருள்ள, வாழ்வளிக்கும் தன்மையை எடுத்துக்காட்டி வாழ்விழந்த மக்களுக்கு வார்த்தையின்மூலம் வாழ்வளிக்கின்றார். இதனையே, திருப்பாடல் 119:89-96ல் நாம் காண்கின்றோம். அங்கு ஆசிரியர் வார்த்தையில் தங்கியிருக்குமாறு அழைக்கின்றார்.
• இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி எபிரேயர் 4:11-13 இப்பகுதியில் ஆசிரியர் ஆண்டவரின் வாக்கு இருபுறமும் கருக்குள்ள பட்டயம் எனக் காண்பித்து வார்த்தையில் காணப்படும் இறைவாக்குத் தன்மையை எடுத்துக் கூறுகின்றார்.
• நற்செய்தி வாசகத்தின்படி லூக்கா 1:5-17 இப்பகுதியில் திருமுழுக்கு யோவானின் பிறப்பைப் பற்றி நாம் பார்க்கின்றோம். சகரியா, இறைவாக்கில் நம்பிக்கையற்றவனாக இருந்தபடியால் தண்டனைக்கு உட்படுகின்றான். பின்னர், அவனின் அவிசுவாசம் அகன்று போனபின்னர் அவன் அற்புதத்தைக் காண்கின்றான். லுக்கா 1:39-45
• லூக்கா நற்செய்தி 1:5-7 வசனம் வரையுள்ள பகுதியில் எலிசபெத் சகரியா இவர்கள் இருவரும் கடவுளால் இடப்பட்ட கட்டளைகளையும் கற்பனைகளையும் கடைப்பிடித்து வந்தனர். இவ்வேளையிலேயே இவர்களுக்கு திருமுழுக்கு யோவானின் பிறப்பின் செய்தி கொடுக்கப்படுகின்றது. லூக்கா 1:39-45 வரையுள்ள பகுதியில் மரியாள் எலிசபெத்தைக் காண செல்கின்றார். தான் கருவுற்ற நிலையில் பல அவமானங்களை அனுபவிக்கும் மரியாள் இப்பொழுது எலிசபெத்தைக் கண்டு ஆறுதலடையச் செல்கின்றார். அவ்விடத்திலேயே எலிசபெத்தும் இத்தகைய அனுபவத்துக்கூடாகச் செல்கின்றார் என உணர்ந்த மரியாள் இருவரும் தமக்கிடைய நிலவுகின்ற வேதனைகளைச் சொல்லி ஒருவரோடு ஒருவர் ஆறுதல் அடைகின்றனர். இம்மாதிரி இன்றைய பெண்களுக்கும் அவசியமாகின்றது.
• திருமுழுக்கு யோவான் கடவுளுக்கு வழியை ஆயத்தப்படுத்த அனுப்பப்படுகின்றார். இவர் இயேசுவுக்கு முன்னோடியாகவும் அமைகின்றார். லூக்கா 3:10-17 வரையுள்ள பகுதியில் பகிர்வு, நேர்மை போன்ற இறையரசின் பண்புகளை விதைக்கின்றார். மாற்கு 6:1-20ல் நீதி என்னும் பண்புக்கு உயிர் கொடுக்கின்றார்.
• திருமுழுக்கு யோவானும் ஆண்டவர் இயேசுவைப் போன்று இறையாட்சிக்காக வாழ்ந்து இறையாட்சிக்காக மரித்தவர். எனினும், அவர் மீண்டும் வருவார் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்பட்டது. லூக்கா 8:19-23ல் பிலிப்பு செசரியா பட்டணத்தில் இயேசுவின் அறிக்கையில் ஜனங்கள் அவரை யாரென்று கூறுகின்றார்கள் எனக் கேட்ட கேள்விக்கு ஒருசிலர் திருமுழுக்கு யோவான் என்றும் கூறுகிறார்கள் என உரைத்த பதில் அதிசயமானது. எனவே, கிறிஸ்து பிறப்பு நாட்களில் திருமுழுக்கு யோவானின் எளிமை, தாழ்மை போன்ற பண்புகளுடன் இயேசுவை வரவேற்க ஆயத்தமாவோமாக.
Comments
Post a Comment