"MY LORD AND MY GOD" (5 Mins Read)

 

MY LORD AND MY GOD

என் ஆண்டவரே, என் கடவுளே

# திருமறைப் பகுதி:

ஏசாயா 45 : 21 - 25

யோவான் 20 : 24 - 29

பிலிப்பியர் 2 : 5 - 11

சங்கீதம் 35 : 18 - 28

# உட்புகுமுன்:

மூவொரு கடவுளின் திருப்பெயரால் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு சிலருடைய வார்த்தைகள் மிகவும் ஆற்றல் மிகுந்தவையாக இருக்கின்றது. அவர்களின் வார்த்தைகளுக்கு பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்து இருப்பதை நாம் காணலாம்.

சாதிய மோதல்களால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை Fact Finding Team ஆக சந்தித்தோம்.

உயர்சாதியினர் என்று கருதப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையின் காரணமாக கிராமங்கள் முழுவதும் சிதைக்கப்பட்டிருந்தன.

ஆண்கள் அனைவரும் தப்பியோடி பல இடங்களுக்கு சிதறடிக்கப்பட்டார்கள்.

முதியவர்களும், குழந்தைகளும், பெண்களும் மாத்திரம் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிராமங்களில் கூடியிருந்தார்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பெண்கள் எங்களிடம் கூறிய வார்த்தைகள் அவர்களின் இறை பற்றையும் எதிர்கால நம்பிக்கையும் எங்களுக்குள் விதைத்தன.

எங்க சாமி அவங்கள (ஒடுக்குகின்ற சமூகத்தினரை) சும்மா விடாது, பழிக்கு பழி வாங்கியே  தீரும், எங்க பக்கம் சாமி இருக்கிறார், நீதி ஒருநாள் வெல்லும் என்று கூறினார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களின் இறை நம்பிக்கை என்பது ஆழமானது, ஒடுக்கப்பட்டோருடன் கடவுள் இருக்கிறார், எங்களை விடுதலைக்கு நேராக வழி நடத்துவார், எங்களுக்கு விடுதலை அருளுவார் என்கின்ற வார்த்தை ஒடுக்குதலின் மத்தியிலும் அவர்கள் துணிந்து வாழ்வதற்கு அவர்களை வழிநடத்துகின்றது. தொடர்ந்து போராடுவதற்கு ஆற்றல் தருகிறது.

உலக வரலாற்றில் பலரின் பேச்சுக்களும், அவர்களின் வார்த்தைகளும் உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அவைகள் புதிய வரலாற்றை கட்டமைத்து இருக்கிறது. உதாரணமாக...,

"Here I Stand" - Martin Luther

"World is my Parish" - John Wessley

"Expect great things from God attempt great things for God" - William Carey

"If I cannot do great things I can do small things in a great way" - Martin Luther King Junior

"God is a verb, not a noun" – R. Buckminster Fuller.

"Be realistic demand the impossible" - Che Guevara

"Lord make me an instrument of thy peace"- Francis of Assisi

"We must be ready to allow ourselves to be interrupted by God." - Dietrich Bonhoeffer

இயேசுவின் உயிர்ப்பிக்கு பின்வரும் முதல் ஞாயிறு வழிபாட்டிற்கான  தலைப்பு "என்ண்டவரே , என்டவுளே."

இயேசுவின் அடியவர்களில் ஒருவரான தோமையார் அவர்களின் என் ஆண்டவரே , என் கடவுளே.  ஆண்ட  இந்த வார்த்தை திருச்சபை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

இயேசு கிறிஸ்துவின் "இறையாட்சி"  என்கின்ற இலட்சியத்தை தோமையார் அவர்கள் நிறைவேற்றுவதற்கு அடித்தளமாக அமைந்தது இந்த வார்த்தையும் அதனைச் சார்ந்த அவரின் பற்றுறுதியும் ஆகும்.

#பின்னணியம்:

இயேசுவின் உயிர்ப்பிக்கு கல்லறை ஒரு சான்றாக அமைந்திருந்தது, பெண்கள் சான்றாக இருந்தார்கள், எம்மாவு ஊர் சென்ற சீடர்களும் சான்றாக இருந்தார்கள், மேல் அறையில் கூடியிருந்த சீடர்களும் சான்றாக இருந்தார்கள்.

உயிர்த்த ஆண்டவர் தம் திருக்காட்சியை தம் சீடர்களுக்கு பகிர்ந்து கொண்ட போது அவரின் சீடர் தோமையார் அவர்களோடு இல்லை.

இயேசுவின் உயிர்ப்பு என்பது சாத்தியமற்றது என்பது தோமையார் அவர்களின் நிலைப்பாடு ஆகும்.

தோமையாரின் வார்த்தைகளும் அவரின் செயல்பாடுகளும் அதையே பிரதிபலிப்பதை நாம் காணலாம்.

உயிர்த்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தோமையாரை சந்தித்து தன் காயங்களை தொடுவதற்கும், உணர்ந்து பார்ப்பதற்கும் வாய்ப்பளித்தார்.

உயிர்த்த ஆண்டவரின் திருக்காட்சியும் அவரின் வார்த்தைகளும் தோமையாருக்கு உந்துதல் தந்தது, ஆற்றலை தந்தது, அர்ப்பணிப்புக்கு வழி நடத்தியது.

உயிர்த்த இயேசு கிறிஸ்துவிடம் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து       என் ஆண்டவரே , என் கடவுளே. என்று  சான்று பகர்ந்ததோடு மட்டுமல்ல இயேசுவின் திருப்பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து தன் பயணத்தை துவங்கினார்.

 

மூன்று திருமறை பகுதிகள் வழியாக இன்னும் ஆழங்களுக்குப் போவோம்.

1. என் ஆண்டவரே என் கடவுளே : ஒடுக்கப்பட்ட சமுகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. (யோவான் 20 : 24 29)

2. . என் ஆண்டவரே என் கடவுளே : மீந்திருக்கும் சமுகத்தின் அனுபவத்தினை பகிர்ந்துகொள்கிறது.  (ஏசாயா : 45 : 21 25)

3. என் ஆண்டவரே என் கடவுளே : ஆதித்திருச்சபையின் சான்றினை பறைசாற்றுகிறது. ( பிலிப்பியர் : 2 : 5 11)

1.   என் ஆண்டவரே என் கடவுளே : ஒடுக்கப்பட்ட சமுகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. (யோவான் 20 : 24 29)

இயேசு கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் இயேசுவின் சீடர்களுக்கு அச்சத்தை  உண்டாக்கியது.

சமயம் மற்றும் அரசியல் அதிகாரங்களால் ஒடுக்குதலுக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டார்கள்.

பூட்டிய வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் அவல நிலைக்கு சீடர்கள் தள்ளப்பட்டார்கள்.

ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இயேசுவின் சீடர்கள் தலை மறைவு வாழ்க்கை வாழ நிர்பந்திக்கப்பட்டார்கள்.

இயேசுவின் சீடர்கள் மத்தியில் ஒடுக்கும் சக்திகள் பற்றிய அச்சம், பயம், நடுக்கம், திகில், எதிர்காலம் குறித்த கவலை அனைத்தும் குடி கொண்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் சீடர்களை சந்திக்கின்றார் தோமா இயேசுவின் உயிர்ப்பில் ஐயம் கொள்கிறார்.

தோமா அவர்களின் ஐயத்திற்கு பல காரணங்கள் உண்டு.

 

ஒரு சாதாரண யூத பாரம்பரிய பிற்போக்குவாதியாகவே வாழ்ந்திருக்கிறார் என அறிய முடிகிறது.

 A. உயிர்த்தெழல் இல்லை என்கின்ற சதுசேயர்களின் தாக்கம் தோமாவுக்கு இருந்திருக்கிறது.

B. அன்றைய நீதித்துறையின் மீது தோமாவுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கிறது.

C.பொய் சாட்சிகளின் தாக்கம் சமூகத்தில் இருந்திருந்ததை தோமா உள்வாங்கி இருந்திருக்கின்றார்.

D.மேசியா யுகம் இன்னும் துவங்கப்படவில்லை என்கின்ற கருத்தியலில் நிலை கொண்டிருந்தார்.

E.வந்துவிட்ட மேசியா யுகத்தை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் தோமா இருந்திருக்கின்றார்.

F. இயேசு கிறிஸ்துவின் போதனைகளும், செயல்பாடுகளும், அற்புதங்களும் இறை ஆட்சியின் அடையாளங்களாக தோமாவால் காண முடியவில்லை.

G.இயேசுவின் சீடராக இருந்தும் தோமா உயிர்த்த ஆண்டவரின் திருக்காட்சியை, காயங்களை கண்ட தோமையார் இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை வைக்கின்றார்.

இயேசுவின் மரணத்திற்கு பின்பதாக மறைந்து வாழ்ந்த சீடர்களோடு தோமா இல்லாததின் காரணமும் ஒடுக்குதலுக்கு அஞ்சி வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அனுபவமாகவே இருக்கிறது.

இயேசுவின் உயிர்ப்பு ஒடுக்குதலின் சக்திகளுக்கு எதிராக அமைந்தது.

கடவுள் இயேசுவை உயிரோடு எழுப்பினார். இயேசுவின் உயிர்ப்பு ஒடுக்கப்பட்ட  சீடர்களின் விடுதலை வாழ்வுக்கு வித்திட்டது.

இயேசுவின் உயிர்ப்பின் அனுபவம் தோமையாரின் விடுதலை அனுபவம் ஆனது. அது ஒடுக்கப்பட்ட சீடர்களின் அனுபவமாக உருமாறியது.

உயிர்த்த ஆண்டவரை சந்தித்த தோமையார் சொல்லுகின்ற "என்ண்டவரே , என்டவுளே."

 இந்த வார்த்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குரலாக ஒலிக்கின்றது.

தோமையார் அவர்களும் இயேசுவின் உயிர்ப்பின் மூலம் கடவுள் ஒடுக்கப்பட்டோருடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார், அவரே  "என்ண்டவரே , என்டவுளே."  என்று சான்று பகர்கின்றார்.

ஒடுக்கப்பட்டோரின் நல் வாழ்விற்காக சிலுவைச் சாவை ஏற்று உயிர்பெற்ற இயேசுவோடு ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதியாக தோமையார் தன்னை இணைத்துக் கொள்கின்றார்.

தோமையார் அவர்கள் கூறுகின்ற My  "என்ண்டவரே , என்டவுளே." என்பது வெறும் வார்த்தை அல்ல  தோமையார் பெற்ற விடுதலை வாழ்வில் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. இதன் மூலம் தோமையார் அவர்கள்,

 

🍎தன்னை மறு பிறப்பிற்கு அர்ப்பணித்தார்

🍎தன்னை மறு ஒப்படைப்புக்கு அர்ப்பணித்தார்

🍎தன்னை இயேசுவின் இறை ஆட்சி திருப்பணிக்கு கையளித்தார்

🍎இயேசுவைப் போல துன்புறுவதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்

🍎பாடுகளின்  வழியாகத்தான் மீட்பு எனும் இயேசுவின் சிந்தையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

2.    என் ஆண்டவரே என் கடவுளே : மீந்திருக்கும் சமுகத்தின் அனுபவத்தினை பகிர்ந்துகொள்கிறது.  (ஏசாயா : 45 : 21 25)

சிறையிருப்பில் மீந்திருந்த இஸ்ரவேல் மக்களுடைய வாழ்வில் நம்பிக்கை குன்றி இருந்தது.

தாங்கள் விடுதலை அடைவோம் என்ற பற்றுறுதி சிறையிருப்பில் இருந்த இஸ்ரவேலருக்கு இல்லாமலே போய்விட்டது.

சிறையிருப்பில் மீந்திருந்த இஸ்ரவேல் சமூகத்திற்கு கடவுள் ஏசாயா தீர்க்கர் வழியாக விடுதலை வாழ்வின் நம்பிக்கையை ஊற்றுகின்றார்.

கடவுள் கோரேஸ் மன்னனை தெரிந்து கொண்டு, அவர் மூலமாக இஸ்ரவேல் சமூகத்திற்கு விடுதலை வாழ்வினை அருளுகின்றார்.

கோரேஸ் மன்னன் யூதர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவர்.

சிறை இருப்பில்  மீந்திருந்த இஸ்ரவேல் மக்களுக்கு பிற இனத்தவராகிய கோரேஸ் மூலம் விடுதலை வாழ்வுக்கு வழி நடத்துகின்றார்.

கோரேஸ் மன்னர் மூலம் சிறை இருப்பில் இருக்கின்ற மக்கள் விடுதலை அடைந்த பின் கடவுளை புரிந்து கொண்ட கொண்ட விதமும் தோமாவின் அனுபவத்தோடு ஒத்து இருக்கிறது.

விடுதலைப் பெற்ற இஸ்ரவேல் சமூகம்,  எங்களை விடுவித்த  இந்தக் கடவுள் தான்  "என்ண்டவரே , என்டவுளே."  என்று சான்று பகர்ந்தனர்.

"என்ண்டவரே , என்டவுளே." என்பது விடுதலை பெற்ற இஸ்ரவேல் சமூகத்தின் அனுபவ வெளிப்பாடாக நாம் இதை காணலாம்.

"என்ண்டவரே , என்டவுளே." என்பது சிறையிருப்பில் ஒடுக்குதலில் இருந்து மீண்ட இஸ்ரவேல்  சமூகத்தின் தனித்தனி அனுபவம் என்று கூறலாம்.

விடுதலை பெற்ற இஸ்ரவேல் சமூகத்தின் மொத்த அனுபவத்தின் சான்றாகவும் இந்த வார்த்தையை புரிந்து கொள்ளலாம்.

ஒடுக்குதலில் சிறை இருப்பில் மீந்திருந்த இஸ்ரவேல் சமூகம் சிறையிருப்பிலும் இதே நம்பிக்கையின் அனுபவத்தை கொண்டிருந்தது. விடுதலை பெற்ற பின்பதாக இன்னும் அவர்கள் வாழ்வில் உறுதி ஆனது. 

"என்ண்டவரே , என்டவுளே."  எனும் அனுபவம்  "நம் ண்டவரே , நம் டவுளே."

எனும் விடுதலை அடைந்த சமூகத்தின் அனுபவமாக மாறியது.

ஏசாயா தீர்க்கர் அழுத்தம் திருத்தமாக "நானே கடவுள் என்னை இன்றி உங்களுக்கு வேறு யாரும் இல்லை" என்று இஸ்ரவேல் மக்களுக்கு கூறுகின்ற இந்த வார்த்தை, அவர்களின் விடுதலை அனுபவத்தின் வெளிப்பாடாக மாறியது.

கோரேஸ் மன்னர் வழியாக சிறையிருப்பில் மீந்திருந்த இஸ்ரவேல் சமூகம் பெற்ற விடுதலை வாழ்வு,

 

🍎 என்ண்டவரே , என்டவுளே என்ற பற்றுறுதி வாழ்விற்கு இஸ்ரவேலரை வழி நடத்தியது.

🍎 "என்ண்டவரே , என்டவுளே."   என்பது இஸ்ரவேல் மக்களின் ஒட்டுமொத்த அனுபவ சான்றாக மாறியது.

🍎 "என்ண்டவரே , என்டவுளே."   நாங்கள் ஆராதிக்கின்ற கடவுள் ஒடுக்கப்பட்டோரின் கடவுள் என்று உலகிற்கு கடவுளை அறிமுகப்படுத்தியது.

🍎 "என்ண்டவரே , என்டவுளே." என்ற விடுதலை அனுபவம் கடவுளின் விடுதலை செயல்களை உலகிற்கு எடுத்துக்காட்டியது.

🍎 "என்ண்டவரே , என்டவுளே."    ஒடுக்குதலுக்கு எதிராக செயல்படுகின்றவர்,  அவர் விடுதலையாளர் என்கின்ற பேர் உண்மையை பறைசாற்றியது.

🍎 "என்ண்டவரே , என்டவுளே."  அனுபவம் அவர்களை மீண்டும் கடவுளிடம் திரும்புவதற்கு வழியாக அமைந்தது.(Turn to God)

🍎 "என்ண்டவரே , என்டவுளே." எனும் அனுபவம், விடுதலைப் பெற்ற இஸ்ரவேல் சமூகம் கடவுளில் களிகூர்ந்து மகிழ்ந்த அனுபவமாக இதை புரிந்து கொள்ளலாம். (Experience of Rejoicing with the Lord)

🍎 "என்ண்டவரே , என்டவுளே." எனும் இஸ்ரவேல் மக்களின் அனுபவம் அவர்களின் ஆழமான பற்றுறுதியின் அனுபவமாக எடுத்துக் கொள்ளலாம்.

🍎சிறை வாழ்வை அனுபவிக்கின்ற ஒவ்வொருவரும், ஒவ்வொரு சமூகமும் தங்கள் வாழ்வின் விடுதலை அனுபவத்தை  "Our Lord and Our God" என்பதோடு இணைத்துப் பார்க்கலாம்

🍎 "என்ண்டவரே , என்டவுளே."  எனும் இந்த அனுபவம் விடுதலை பெற்ற சமூகத்தின் மாபெரும் அனுபவத்தில் வெளிப்பாடாக திருமறை சுட்டிக் காட்டுகிறது

3.   என் ஆண்டவரே என் கடவுளே : ஆதித்திருச்சபையின் சான்றினை பறைசாற்றுகிறது. ( பிலிப்பியர் : 2 : 5 11)

இயேசுவின் உயிர்ப்பிற்கு பின்பதாக இயேசுவின் சீடர்கள் உலகமெங்கும் பயணித்தார்கள்.

இயேசு கிறிஸ்துவின் லட்சியமான இறை ஆட்சியை அமைப்பதற்கு இயேசுவின் சீடர்கள் தங்களை குருதிச் சான்றாக ஒப்படைத்தார்கள்.

உயிர்த்த ஆண்டவரின் திருக்காட்சியை தமஸ்க்கு  சாலையில் கண்டு, அவரோடு உரையாடின திருத்தூதுவராகிய பவுலடியார் தம் வாழ்வை இயேசுவின் திருப்பணிக்கென்று அர்ப்பணிக்கின்றார்.

திரு தூதுவராகிய பவுலடியார் உயிர்த்த ஆண்டவரை சந்திக்கும் முன்பு வரைக்கும் நியாயப்பிரமாணமே விடுதலை தரும் என்ற பற்றுறுதியில் நிலை கொண்டிருந்தார்.

நியாயப்பிரமாணச் சட்டங்களை யார் மீறினாலும் அவர்களை துன்புறுத்துவதிலும், தண்டிப்பதிலும் உறுதியாக இருந்தார்.

நியாயப்பிரமாணமே வழி, வாய்மை, வாழ்வு என்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.

நியாயப்பிரமாணத்தை மீறுகின்றவர்களுக்கு நியாயப்பிரமாண சட்டத்தின் படி தண்டிக்கவும் அவர்களை கொலை செய்வதற்கும் தயங்கியதே இல்லை.

இயேசுவின் பாடு மரணத்துக்கு பின்பதாக இயேசுவை ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்கள் பவுலைப்  போன்ற வைராக்கியம் உள்ள யூத சமய, அரசாங்க தலைவர்களால் அச்சுறுத்தப்பட்டார்கள்.

இயேசுவை ஏற்றுக் கொண்ட இயக்கத்தினர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். (Diaspora Community)

இயேசுவின் அடியார்களை துன்புறுத்திய பவுல் அடியார் உயிர்த்த ஆண்டவரை சந்தித்த பின்பதாக மாற்றம் அடைகின்றார்.

பவுலடியரின் சிந்தனையும், பற்றுறுதியும், செயல்பாடுகளும் முற்றிலும் முந்தைய நிலைக்கு மாறாக மாற்றம் பெற்றது.

🍎பவுல் அடியாரின் மனம் மாற்றத்திற்கு முன்பதாக, அவரால் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவம்  "என்ண்டவரே , என்டவுளே."  எனும் நிலையிலேயே இருந்தது.

🍎பவுலின் மனமாற்றத்திற்கு முன்பதாக அவரின் பணிகள், துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள், தண்டனைகள், சித்திரவதைகள்... ஆதி திருச்சபையின்  "என்ண்டவரே , என்டவுளே." என்ற அனுபவமாகவே இருந்தது.

🍎பவுல் அடியாரின் மன மாற்றத்திற்கு பின்பதாக பவுல் அடியாரின் திருப்பனியின் மூலமாக ஆதித்திருச்சபையினர் அச்சுறுத்தலிலிருந்து விடுதலைப் பெற்றார்கள்.

🍎சிதறடிக்கப்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து கடவுளை வழிபடும் நிலைக்கு உருவாக்கப்பட்டார்கள்.

🍎இயேசு கிறிஸ்துவின் இயக்கம் மேலும் வலுப்பெற்று அது எல்லைகளைத் தாண்டி பயணித்தது.

🍎துன்புறுத்துவதற்காக சென்ற பவுல் அடியார் துன்புறும் தாசராக தன்னை மாற்றிக்கொண்டார்.

🍎ஏசாயா தீர்க்கர் வலியுறுத்துவதைப் போல பாடுபடும் தாசனாக தன்னை உருவாக்கிக் கொண்டார் பவுல் அடியார்.

திருத்தூதுவராகிய பவுல் பிலிப்பு திருச்சபைக்கு எழுதிய கடிதத்தில், "பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." (பிலிப்பியர் 2 : 11) என்று எழுதுகின்றார்.

பவுல் அடியாரின் அர்ப்பணிப்பும் அவரின் ஒப்படைப்பும் அவரின் திருப்பணியும் ஆதித்திருச்சபையில் பல தாக்கங்களை உண்டாக்கின.

ஆதி திருச்சபை மக்களிடத்தில் தவறான போதனைகள் குறித்த விழிப்புணர்வுகள் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தன.

தவறான நடக்கைகள் கண்டிக்கப்பட்டன அவைகளிலிருந்து மக்கள் மனம் மாறுவதற்கு வலியுறுத்தப்பட்டார்கள்.

இயேசு கிறிஸ்துவே  "என்ண்டவரே , என்டவுளே."  என்று அறிக்கை(Evidence) பண்ணும்படியாக பவுலின் திருப்பணிகள் அமைந்திருந்தன.

நியாயப்பிரமாணச் சட்டங்களை காட்டிலும் அன்பே பெரியது என்னும் கருத்தியலில் ஆதித்திருச்சபை மக்களை வழிநடத்தியது.

ஆதித்திருச்சபை பவுல் அடியார் மூலம் அடைந்த துன்பங்களை,  சித்திரவதைகளை, பாடுகளை,  அவமானங்களை, கல்லறைகளை, சிறை தண்டனைகளை, மரணங்களை அனுபவித்த போதெல்லாம்,  அவர்கள் மனதில் இருந்ததெல்லாம் "என்ண்டவரே , என்டவுளே."  எனும் அனுபவம் தான்.

பவுல் அடியாரின் மனமாற்றத்திற்கு பின்பதாக ஆதித்திருச்சபை பெற்ற விடுதலை அனுபவத்தின் வெளிப்பாடும், சான்றும்  "என்ண்டவரே , என்டவுளே."  என்பதுதான்.

திருத்தூதவராகிய பவுல் அடியார் கிறிஸ்து துன்புறும்பொழுது அவரின் அனுபவமும் சான்றும்  "என்ண்டவரே , என்டவுளே." என்பதாகத்தான் அமைந்திருந்தது.

"என்ண்டவரே , என்டவுளே." எனும் தோமாவின் அறிக்கை சிதறடிக்கப்பட்ட ஆதி திருச்சபையனரின் அனுபவமாகவும், வெளிப்பாடாகவும், சான்றாகவும் அமைந்திருந்தது.

# தற்போதைய சூழலின் பொருத்தம்:

இன்றைய இந்திய சூழலில் தலித் மக்களின் அனுபவமும் தோமாவின் அனுபவத்தோடு  "என்ண்டவரே , என்டவுளே." ஒத்துப் போகின்றது.

ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பெண்களின் வெளிப்பாடாக தோமாவின்  "என்ண்டவரே , என்டவுளே."  கூற்று அமைந்திருக்கிறது

கொத்தடிமைகளாக  ஒடுக்குபவரின் வட்டத்திற்குள், சிறை இருப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களின் வெளிப்பாடாகவும்  "என்ண்டவரே , என்டவுளே."

சாதிய மோதல்களால் சிதறடிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த குரலாக  "என்ண்டவரே , என்டவுளே." ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சமய அடிப்படை வாதங்களால் துன்புறுகின்ற சிறுபான்மை மக்களின் உணர்வுகளை  "என்ண்டவரே , என்டவுளே."  பிரதிபலிப்பதாக இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பாடுபடுகின்றவர்களின் கூக்குரலாகவும்  "என்ண்டவரே , என்டவுளே." இது எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

மானுடம் மட்டுமல்ல சீரழிக்கப்பட்ட ஒட்டுமொத்த இயற்கையின், படைப்பின் ஒப்பாரியாகவும்  "என்ண்டவரே , என்டவுளே."  புரிந்து கொள்ளப்படுகின்றது.

# நிறைவாக:

உயிர்த்த ஆண்டவரை சந்தித்த தோமா கூறுகின்ற  "என்ண்டவரே , என்டவுளே." எனும் அனுபவம், சான்று, வெளிப்பாடு தோமையார் அவர்களை கடல் கடந்து பயணிக்க வைத்தது.

சமயவாதிகளாலும், ஆதிக்க சாதியினராலும் அடிமைத்தனத்தில் சிக்குண்டு தவித்த இந்திய மக்களுக்கு, குறிப்பாக மீனவ சமுதாயங்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தோமையாரின் திருப்பணி விடுதலை வாழ்வுக்கு வழி நடத்தியது.

தோமையார் அவர்களின் திருப்பணியால்  "என்ண்டவரே , என்டவுளே." என்னும் தோமாவின் சான்று இந்தியர்களின் சான்றாக மாறினது.

"என்ண்டவரே , என்டவுளே."  என்று சான்று பகர்ந்த தோமையார் தமிழ்நாட்டில் உள்ள பரங்கி மலையை கொல்கதா மலையைப் போல வடிவமைத்து குருதி சான்றாக உயிர் நீத்தார்.

தோமையாரின் திருப்பணிகளும் அவர் உருவாக்கிய திருச்சபையும், வழித் தோன்றல்களான தென்னிந்தியத் திருச்சபையும் இன்று உரக்கச் சொல்லுகிறது இயேசுவே "நம் ண்டவர் , நம்டவுள்."

 

🍎இன்றைய திருச்சபை தலைவர்கள் தோமையாரை போல உறுதி கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்...

🍎ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விடுதலையை கொண்டு வந்த கோரேஸ் மன்னராக விடுதலை பணிபுரிவோம்.

🍎சிதறடிக்கப்பட்ட மக்களில் ஒருவராக தன்னை நினைத்துக் கொண்ட பவுலடியாரை போல அன்பர்களும், ஆயர்களும் மாறிடுவோம்.

🍎விடுதலை பெற்ற மானுடமும் இயற்கையும்  "என்ண்டவரே , என்டவுளே."

என்று சான்று பகர வாழ்வினை அமைத்திடுவோம்.

# ஜெபம்:

அன்பின் கடவுளே உம்மைப் போற்றுகிறோம். துன்பத்தில் இருப்பவரின் துணையாக நீர் இருக்கின்றீர், பாடுபடும் மக்களோடு நீரும் பாடுபடுகின்றீர், அழுகின்ற மக்களின் அழுகுரலோடு நீரும் இருக்கின்றீர் என்ற உணர்வை தந்ததற்காக உமக்கு நன்றி படைக்கின்றோம். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வினை விடுதலைக்கு நேராக நீர் வழிநடத்துகின்றீர். ஒடுக்குகின்றவர்களுக்கு,  தீய சக்திகளுக்கு நீர் எதிராக யுத்தம் செய்கின்றீர் என்ற வழி நடத்துதலை எங்களுக்கு வெளிப்படுத்தியமைக்காக உமக்கு நன்றி படைக்கின்றோம். விடுதலைப் பெற்றவர்களின் வாழ்வில் வெளிப்படுகின்ற அனுபவம், வெளிப்பாடு, சான்று எங்கள் வாழ்விலும் உமது படைப்பிலும் வெளிப்பட உமது அருளைத் தாரும். இறை ஆட்சி இம்மண்ணில் மலர,  உமது மைந்தன் இயேசு கிறிஸ்துவின் இயக்கமாய் இயங்கிட ஆற்றல் தாரும். உயிர்த்த ஆண்டவரின் திருக்காட்சியை திருமறை வழியாக கண்ட நாங்கள், இயேசுவின் அடியார்களைப் போல அர்ப்பணிப்போடும், ஆற்றலோடும், துணிச்சலோடும், பாடுபட பெலனை தாரும். இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவின் வழியே ஏறெடுக்கிறோம்  எங்கள் பெற்றோராம் கடவுளே. ஆமென்.

 

நட்புடன் உங்கள்

அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி

அரியலூர் சேகரம்

சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்

✝️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘🍀✝️

 

 

 

Comments